திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1842 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1842பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டு பூமியை அளந்து கொண்டவன் இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 5
வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் விண்ணவர் கோன் மது மலர் தொங்கல் நீண் முடியான் நெடியான் படி கடந்தான் மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகமீது உயர்ந்தேறி வானுயர் திங்கள் தான் அணவும் திருக் கோட்டியூரானே –9-10-5
பதவுரை Show / Hide
வங்கம் கடல் வண்ணன், Vangam Kadal Vannan - கப்பல்களையுடைய பெரிய கடலின் நிறம்போன்ற நிறமுடையவனும்
மர மணி வண்ணன், Mara Mani Vannan - நீலமணி நிறமுடையவனும்
விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்யஸூரிகட்குத் தலைவனும்
மது, Madhu - தேனையுடைத்தான
மலர் தொங்கல், Malar Thongal - பூமாலையை
நீள் முடியான், Neel Mudiyaan - நீண்ட திருவபிஷேகத்தி லணிந்துள்ளவனும்
நெடியான், Nedhiyaan - ஸர்வோத்க்ருஷ்டனும்
படி கடந்தான், Padi Kadandhaan - (த்ஜீவிக்ரமாவதாரத்தில்) பூமியையளந்து கொண்டவனமான பெருமான்
மங்குல் தோய் மணி மாடம், Mangul Thoi Mani Maadam - மேகமண்டலத்தை அளாவியிருக்கின்ற மணிமாடங்களிலே (கட்டின)
வெண் கொடி, Ven Kodi - வெளுத்த த்வஜபடங்கள்
மாகம் மீது, Maagam Meedhu - ஆகாசத்தின் மேலே
உயர்ந்து ஏறி, Uyarnthu Eri - வியாபித்து
வரன் உயர் திங்கள்தான், Varan Uyar Thingalthaan - மிகவுமுயரநின்ற சந்திரனை
அணவும், Anavum - ஸ்பர்சிக்கப்பெற்ற
திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான்.