திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1844 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1844பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கன்றாயும் விளாவாயும் வந்த அசூரர்களால் வரும் நலிவைப் போக்கி ஸ்ரீ கோவர்த்தன உத்தாரணம் பண்ணின மகா அபதானத்தை உடையவன் -இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 7
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று மா மழை நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான் குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம் தென்றல் வந்து உலவும் திருக் கோட்டியூரானே –9-10-7
பதவுரை Show / Hide
கன்று கொண்டு, Kandru Kondo - வத்ஸாஸுரனைக் கொண்டு
விளங்கனி, Vilanganai - கபித்தாஸுரன் மீது
எறிந்து, Erinthu - வீசியெறிந்து இரண்டையும் முடித்தவனும்
ஆநிரைக்கு அழிவு என்று, Aaniraikku Azhivu Endru - பசுக்கூட்டத்திற்குத் தீங்கு வந்ததேயென்றுபரிந்து
மா மழை, Maa Mazhai - பெருமழையை
நின்று காத்து, Ninru Kaathu - நிலைநின்று தடுத்து
உகந்தான், Uganthaan - திருவுள்ளமுவந்தவனும்
நிலம் மா மகட்கு, Nilam Maa Makadkku - பூமிப்பிராட்டிக்கு
இனியான், Iniyaan - போக்யனுமான எம்பெருமான்
இள தென்றல், Ila Thenral - இளமைதங்கிய தென்றற்கொற்று
குன்றின் முல்லையின் வாசமும், Kunrin Mullaiyin Vaasamum - மலைமுல்லைப்பூக்களின் பரிமளத்தையும்
குளிர் மல்லிகை மணமும், Kulir Malligai Manamum - குளிர்ந்த கொடிமல்லிகையின் பரிமளத்தையும்
அளைந்து, Alaindhu - முகந்துகொண்டு
வந்து உலவும், Vandhu Ulavum - வந்து (வீதிகளில்) உலாவப்பெற்ற
திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான்