திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1845 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1845பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குருந்து தொடக்கமான விரோதி வர்க்கத்தைப் போக்கின ஸ்ரீ கிருஷ்ணன் -இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 8
பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே –9-10-8
பதவுரை Show / Hide
பூ, Poo - பூத்திருந்த
குருந்து, Kurundhu - குருந்தமரத்தை
ஒசித்து, Osiththu - முறித்துத் தள்ளினவனாயும்
ஆனை, Aanaik - (குவலயாபீட மென்னும்) யானையை
காய்ந்து, Kaayndhu - சீறிமுடித்தவனாயும்
அரிமா, Arimaa - (கேசியென்னும்) குதிரையை
செருத்து, Seruththu - கொன்றவனாயும்
அடியேனை, Adiyenai - அடியேனை
ஆள் உகந்து, Aal Ugandhu - ஆட்கொண்டருளத் திருவுள்ளமுவந்து
ஈங்கு, Eengu - இந்த ஸம்ஸாரத்திலே
என்னுள் புகுந்தான், Ennul Pugundhaan - என்னெஞ்சினுள்ளே புகுந்தருளினவனாயும்
இமையோர்கள் தம் பெருமான், Imaiyorkal Tham Perumaan - நித்யஸூரிகளுக்குத் தலைவனாயுமுள்ள பெருமான்
மாங்கனி, Maangani - மாம்பழங்கள்
துங்கு, Thungu - (பழுத்துத்) தொங்குகின்ற
தண், Than - அழகிய
பலவின் கனி, Palavin Kani - பலாப்பழங்களோடும்
தொகு வாழையின் கனியோடும், Thogu Vaalaiyin Kaniyodum - திரண்ட வாழைப்பழங்களோடுங்கூட
தேங்கு, Thengu - (விழுந்து) தேங்கியிருக்கப்பெற்ற
தண் புனல், Than Punal - குளிர்ந்த நீர்நிலங்களாலே
சூழ், Sool - சூழப்பட்ட
திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான்.