திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1849 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வைஸ் ஸ்ப்ருஹணீயனானவை ஸ்ரீ திருமலையிலே கண்டோம் – இனி ஸ்ரீ திருத் தண் காவிலே சென்று காணக் கடவோம் – என்கிறார்) 2 | பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே –10-1-2 | பதவுரை Show / Hideபொன்னை, Ponnai - பொன்போல விரும்பத்தகுந்தவனும் மா மணியை, Maa Maniyai - நீலமணிபோன்றவனும் அணி ஆர்ந்தது ஓர் மின்னை, Ani Aarnthathu Oru Minnai - அழகுமிக்கதொரு மின்னற் கொடிபோன்று உஜ்ஜவல ஸ்வரூபியானவனும் என்னை ஆளுடை ஈசனை, Ennai Aaludai Eesanai - என்னை அடிமைகொண்ட ஸ்வாமியுமான எம்பிரான் தன்னை, Embiran Thannai - ஸர்வேச்வரனை யாம், Yaam - அடியோம் (நெருநல்), Nerunel - நேற்று வேங்கடத்து உச்சியில், Vengadathu Uchiil - திருவேங்கடமலையின் சிகரத்தில் கண்டு, Kandu - ஸேவித்து, (இன்று), Indru - இன்றைக்கு தண்காவிலே சென்று காண்டும், Thankavilai Sendru Kaandum - திருத்தண்காவிலே போய் ஸேவிப்போம். |