திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1850 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வடதள சாயி யானவனை திருவாலியிலே கண்டோம் – இனி ஸ்ரீ திரு நாங்கூரிலே சென்று காணக் கடவோம் என்கிறார்) 3 | வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை யாரமுதினைப் பைந்துழாய்
மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே –10-1-3 | பதவுரை Show / Hideவேலை, Velai - (பிரளயக்) கடலிலே ஆல் இலை, Aal Ilai - ஆலந்தளிரிலே பள்ளி விரும்பிய, Palli Virumbiya - திருக்கண் துயில்வதை உகந்தருளினவனும் பாலை, Paalai - பால்போன்றவனும் ஆர் அமுதத்தினை, Aar Amudaththinai - அருமையான அமிருதம் போன்றவனும் பைந்துழாய், Painthuzhai - பசுமைதங்கிய திருத்துழாயை யுடையவனும் ஞாலம் உன்னியை, Njaalam Unniyai - உலகத்தவர்களெல்லாராலும் தியானிக்கப்படுபவனுமான மாலை, Maalaik - ஸர்வேச்வரனை ஆலியில் கண்டு மகிழ்ந்து, Aaliil Kandu Makizhndhu - திருவாலியில் ஸேவித்து ஆநந்தித்து நாங்கூரிலே போய் காண்டும், Naangoorile Poi Kaandum - திருநாங்கூரிலே சென்று ஸேவிப்போம். |