திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1852 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ருத்ரனுடைய சாபத்தைப் போக்கினவனை ஸ்ரீ திரு நறையூரிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு மெய்யத்திலே காணக் கடவோம் என்கிறார்) 5 | சுடலையில் சுடு நீறன் அமர்ந்ததோர்
நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி யுண்
விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே –10-1-5 | பதவுரை Show / Hideசுடலையில், Sudalaiyil - சுடுகாட்டில் சுடுநீறன், Suduneeran - சுட்டசாம்பலைப் பூசுமவனான ருத்ரனுக்கு அமர்ந்தது, Amarnthathu - நேர்ந்ததான ஓர் நடலை, Oru Nattalai - ஒரு கஷ்டத்தை தீர்த்தவனை, Theerthavanai - போக்கியருளினவனும் என் உடலை உள் புகுந்து, En Udalai Ula Pugundhu - எனது சரீரத்தினுள்ளே புகுந்து உள்ளம், Ullam - நெஞ்சே உருக்கி உண், Urukki Un - உருக்கி உண்கின்ற விடலையை, Vidalaiyai - யுவாவுமான ஸர்வேச்வரனை நறையூர் கண்டு, Naraiyur Kandu - திருநறையூரிலே ஸேவித்து மெய்யத்துள்ளே சென்று காண்டும், Meyyaththulle Sendru Kaandum - திருமெய்யத்திலே சென்று ஸேவிப்போம் |