திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1855 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் திருவடிகளிலே நல்லாருக்கு ஆத்மாவனவனை ஸ்ரீ தெற்குத் திருமலையிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு விண்ணகரிலே காணக் கடவோம் என்கிறார்) 8 | பத்தராவியைப் பான்மதியை யணித்
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –10-1-8 | பதவுரை Show / Hideபத்தர் ஆவியை, Pathar Aaviyai - பக்தர்களுக்கு ஆத்மாவாக வுள்ளவனும் பால் மதியை, Paal Mathiyai - களங்கமற்ற சந்திரனைப் போல அழகியவனும் அணி தொத்தை, Ani Thothai - ஆபரணமாலை போன்றவனும் முத்தினை, Muththinai - முத்துப்போன்றவனும் மணியை, Maniyai - நீலமணிபோன்றவனும் மணி மாணிக்கம், Mani Manikkam - சிறந்த மாணிக்கம் போன்றவனும் வித்தினை, Viththinai - ஜகத்காரண பூகனுமான எம்பெருமானை மாலிருஞ்சோலை, Maliruncholai - திருமாலிருஞ்சோலையில் போய் தொழுது, Poi Thozhudhu - சென்று பணிந்து விண்ணகர், Vinnagar - திருவிண்ணகரிலே சென்று காண்டும், Sendru Kaandum - போய் ஸேவிப்போம் |