திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1856 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குவலயா பீடத்தின் கொம்பைப் பறித்தவனை ஸ்ரீ திருக் கோட்டியூரிலே கண்டு போய் ஸ்ரீ திரு நாவாயிலே காணக் கடவோம் என்கிறார்) 9 | கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க வோர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனைக்
கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே –10-1-9 | பதவுரை Show / Hideகம்பம், Kambam - (கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்கத்தக்கதாய் மா, Maa - பெரிய வடிவுடைத்தான களிறு, Kaliru - (குவலயாபீடமென்னும்) யானை அஞ்சி, Anji - பயப்பட்டு கலங்க, Kalanga - கலங்கி முடியுமாறு ஓர் கொம்பு கொண்ட, Oru Kombu Konda - அதன் கொம்பை முறித்தெறிந்தவனும் குரை கழல், Kurai Kazhal - ஒலிக்கின்ற வீரக்கழலை யுடையவனும் கூத்தனை, Koothanai - விசித்திரமான நடையுடையவனும் நம்பனை, Nambanai - (அன்பர்) விச்வஸிக்கத் தகுந்தவனுமான பெருமானை கொம்புஉலாம் பொழில், Kombulalam Pozhil - கிளைகள் விளங்குகின்ற சோலைகள் யுடைத்தான கோட்டியூர், Kottiyur - திருக்கோட்டியூரிலே போய் கண்டு, Poi Kandu - சென்று ஸேவித்து நாவாயுள் சென்று காண்டு, Navayul Sendru Kandu - திருநாவாயில் போய் ஸேவிப்போம் |