திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1858 | பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராஷசரில் இனி ஆடு போலேக் கூப்பிடக் கடவார் இல்லை -என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர் – ஆடு -என்று வெற்றி இந்த ராஷச ஜாதியிலே வெற்றி சொல்லக் கடவார் இல்லை -என்கிறது என்ன இதுவே இறே பொருள் என்று அருளிச் செய்தார் -என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் – தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு கூத்துண்டு – அந்த சப்த அநுகாரம் – பொங்கத்தம் பொங்கோ –என்கிற இது) 1 | இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென் இராவணன் பட்டன இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல்விலி ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-1 | பதவுரை Show / Hideஎம் கோன், Em Kon - எங்களுக்குத் தலைவனான இராவணன் இரக்கம் இன்றி, Irakkam Inri - ஈரநெஞ்சு இல்லாமல் செய்த, Seitha - பண்ணின தீமை, Theemai - அபசாரமானது இம்மையே, Immaiye - இப்பிறப்பிலேயே எமக்கு, Emakku - எங்களுக்கு எய்திற்று காணீர், Eydhithru Kanneer - பலித்துவிட்டது பாருங்கோள் இன்று, Indru - இப்போது யாம், Yaam - நாங்கள் பார்க்க, Paarka - விரிவாக உரைத்து என், Uraiththu En - சொல்லுவதனால் என்ன பயன்? இராவணன் பட்டனன், Iravanan Pattanan - ராவண்ன் மாண்டு போனான், இனி, Ini - இனிமேல் யாவர்க்கு உரைக்கோம், Yaavarkku Uraikkom - யாருக்குச் சொல்லுவோம் குரங்கு நாயகர்காள், Kurangu Naayakar Kaal - வாநரஸேநாபதிகளே! இளங்கோவே, Ilankove - இளைய பெருமாளே! கோல் வல்வில் இராமபிரானே, Kol Valvil Ramapiraney - அழகிய திண்ணிதான சார்ங்கவில்லைக்கொண்ட ஸ்ரீராமபிரானே! அரக்கர், Arakkar - ராக்ஷஸஜாதியில் ஆடு அழைப்பார் இல்லை, Aadu Azaippaar Illai - வெற்றியைச் சொல்லிக் கூவுவாரில்லை நாங்கள், Naangal - (தோற்றொழிந்த) நாங்கள் அஞ்சினோம், Anjinom - பயப்படுகின்றோம் தடம் பொங்கத்தம் பொங்கோ, Thadam Pongatham Pongoo - தோற்ற தோல்விக்கு நாங்கள் ஆடுகிற ஆட்டங்காண்மின் என்றவாறு. |