திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1859 | பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒப்பாய் இருக்கிற தோள் இரண்டையும் ஒரு திரு அபிஷேகத்தையும் உடையராய் இருக்கிற உம்மைக் கண்டு அடியாரான நாங்கள் ஒருவர் இருவர் அன்றிக்கே எல்லாரும் ஒக்க வாழ்ந்தோம் எமக்கு ஜனகன் ஆனவனே –எங்கள் நாதனே –-அஞ்சினோம் என்றாரைக் கொல்லுகை உனக்குப் போருமோ) 2 | பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-2 | பதவுரை Show / Hideஅந்த எம்பெருமான், Andha Emperumaan - ஸ்வாமிந் ஸ்ரீராமபிரானே! (- (அஞ்சினோம், தடம்பொங்கத்தம் பொங்கோ)) நீள், Neel - நீண்ட பத்து முடியும், Paththu Mudiyum - பத்துதலைகளையும் அவை இரட்டி, Avai Iratti - அந்தத் தலைகளின் கணக்கில் இரட்டிப்பான கணக்கை யுடையவையாய் பாழி, Paazhi - வலிமைமிக்கவையான தோளும், Tholum - (இருபது) தோள்களையும் படைத்தவன், Padaiththavan - உடையவனான இராவணன் மங்கையர் பால் சித்தம் வைத்து, Mangaiyar Paal Sittam Vaiththu - ஸ்த்ரீ விஷயத்தில் மனம் செலுத்தி செல்வம் கெட்டான், Selvam Kettaan - (தனது) செல்வம் அழியப் பெற்றான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள், Seivathu Ondru Ariyaa Adiyongal - இனிச் செய்யத் தக்க தொன்று மறிய கில்லாத நாங்கள் ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும், Oththa Thol Irandum Oru Mudiyum - ஒன்றோடொன்று ஒப்பான இரண்டு திருத்தோள்களையும் ஒரு திருமுடியையுமுடையாய் ஒருவர் தம் திறத்தோம் அன்றி, Oruvar Tham Thiraththom Andri - அத்விதீயரான தேவரீர் பக்கல் இதற்குமுன்பு ஈடு பட்டவர்களல்லாமையாலே வாழ்ந்தோம், Vaazhnthom - கெட்டுப்போனோம் எம்மை கொல்லேல், Emmai Kollel - எங்களைக் கொல்லா தொழிய வேணும், |