| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 186 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 5 | புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய் கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய் அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் 2-7-5 | புள்ளினை, Pullinai - பகாஸுரனை வாய் பிளந்திட்டாய், Vai pilandhittai - வாய் கிழித்துப் பொகட்டவனே! பொரு, Poru - யுத்தோந்முகமான கரியின், Kariyin - குவலயாபீடத்தின் கொம்பு, Kombu - கொம்பை ஒசித்தாய், Osithaai - பறித்தவனே! கள்ளம் அரக்கியை மூக்கொடு, Kallam arakkiyai mookodu - வஞ்சனை யுடைய ராக்ஷஸியாகிய சூர்ப்பணகையின் மூக்கையும் காவலனை, Kaavalanai - (அவளுக்குப்) பாதுகாவலாயிருந்த ராவணனுடைய தலை, Thalai - தலையையும் கொண்டாய், Kondai - அறுத்தவனே! நீ, Nee - (இப்படிப்பட்ட) நீ வெண்ணெய், Vennai - வெண்ணெயை அள்ளி விழுங்க, Alli vizhungu - வாரி விழுங்க அஞ்சாது, Anjaadhu - சிறிதும் பயப்படாமல் அடியேன், Adiyen - (‘எப்போது குழந்தை பிறந்து வெண்ணெய் விழுங்கப் போகிறது?’ என்றிருந்த) நான் அடித்தேன், Adithen - அடித்தேன்; (அப் பிழையைப் பொறுத்து) தெள்ளிய, Thelliya - தெளிவான நீரில், Neeril - நீரிலே எழுந்த, Ezundha - உண்டான செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீரை சூட்டவாராய், Sootavaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |