திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1861 | பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –ஸ்ரீ பிராட்டியை கொடு போங்கோள்) 4 | எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4 | பதவுரை Show / Hideஏஞ்சல் இல், Aenjal Il - ஒரு குறைவுமில்லாதவனாய் (- (அப்படி சொல்லியும் அப்பாவி பணிந்து வாழ மாட்டாமையாலே) (அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.)) இலங்கைக்கு இறை, Ilankaiyil Irai - (இந்த) லங்காபுரிக்கு அரசனாய் எம் கோன் தன்னை, Em Kon Thannai - எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணனை நோக்கி முன், Mun - முன்பு எங்கள் கண் முகப்பே, Engal Kan Mugappe - எங்கள் கண்ணெதிரில் அவன் தம்பியே, Avan Thambiye - அவனுக்குத் தம்பியான விபீஷ்ணாழ்வான் பணிந்து, Panindhu - விநயமுடன்கைகூப்பிநின்று நங்கையை அரக்கர் குடிக்கு நஞ்சுதான் என்று சொன்னான், Nangaiyai Arakkar Kudikku Nanjudhaan Endru Sonnaan - ‘இப்பிராட்டி ராக்ஷஸ குலத்துக்கு விஷமாகத் தோன்றியவன் கிடாய்’ என்று சொன்னான் விஞ்சை வானவர் வேண்டிற்றேபட்டோம், Vinchai Vaanavar Vendirthepattoam - தேவஜாதிகள் ஆசைப்பட்டிருந்தபடியே (நாங்கள்) அனர்த்தப்பட்டோம் வேரி வார் பொழில் மா மயில் அன்ன, Vaeri Vaar Pozhil Maa Mayil Anna - பரிமளத்தையுடைத்தாய் விசாலமான சோலையில் வளர்ந்த சிறந்தமயில் போன்றவளும் அஞ்சு அல் ஓதியை, Anju Al Othiyai - (சுருட்சி நீட்சி குளிர்ச்சி அழகு பரிமளம் என்று) ஐந்துவகைப்பட்ட குணங்களையுடையதாய் ராத்ரிபோற் கறுத்திருக்கின்ற கூந்தலையுடையளுமான பிராட்டியை கொண்டு நடமின், Kondhu Nadamin - கொண்டு போங்கள் |