திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1862 | பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு மனுஷ்யர்களை அநாதரித்தான்-அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி – அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ) 5 | செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-5 | பதவுரை Show / Hideசெம் பொன் நீள் முடி, Sem Pon Neel Mudi - செம்பொன்னாற் செய்யப்பட்ட நீண்ட கிரீடத்தை யுடையனாய் (- (அதுவே நிமித்தமாக) (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ)) எங்கள், Engal - எங்களுக்குத் தலைவனான இராவணன், Iravanan - ராவணனானவன் சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து, Seethai Enbathu Oru Deivam Konarnthu - ஸீதையென்கிற ஒரு தெய்வப் பெண்ணைக் கவர்ந்து வந்து வம்பு உலாம் கடி காவில், Vambu Ulam Kadi Kaavil - புதுமை மாறாத்தும் பரிமளத்தை யுடையதுமான (அசோக)வனத்திலே சிறை ஆ வைத்ததே, Sirai Aa Vaiththadhe - சிறையிலிருப்பாம்படி வைத்திருந்த இதுதானே குற்றம் ஆயிற்று, Kutram Aayitru - அபராதமாய்த் தலைக் கட்டிற்றுக்கிடீர் கும்பனோடு நிகும்பனும் பட்டான், Kumbanodu Nikumbanum Pattaan - கும்பனும் நிகும்பனும் மாண்டொழிந்தனர் கூற்றம், Kootram - (இராவணன்கையில் முன்பு தோற்றிருந்த) யமனானவன் மானிடம் ஆய் வந்து தோன்றி, Maanidam Aay Vandhu Thonri - மநுஷ்ய வேஷத்தைப் பூண்டு கொண்டு இங்ஙனே வந்துதோன்றி எம்மை, Emmai - எங்களை அம்பினால், Ambinaal - பாணத்தினால் கொன்றிடு கின்றது, Kondridhu Kindrathu - கொல்லுகின்றான். |