திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1863 | பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து – வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் –நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே ஸ்ரீ பிராட்டியை விட்டுக் கொடாதே இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ) 6 | ஓதமாகடலைக் கடந்தேறி யுயர்கொள் மாக்கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடலிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-6 | பதவுரை Show / Hideஓதம், Otham - அலைகலையுடைய (- (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ.)) கடந்து ஏறி, Kadandhu Eri - தாண்டி உயிர்கொள் மா கடி காவை இறுத்து, Uyirkol Maa Kadi Kaavai Irudhu - உயர்த்தியையுடைத்தாய்ப் பெரிதாய் மணம்மிக்கதான அசோகவனத்தை முறித்து காதல், Kaadhal - (இராவணனுடைய) அன்புக்கு இலக்கான மக்களும், Makkalum - அக்ஷகுமாரன் முதலிய புத்திரர்களையும் சுற்றமும், Sutramum - அந்தரங்க சேவகர்களையும் கொன்று, Konru - கொலை செய்து கடி இலங்கை மலங்க எரித்து, Kadi Ilangai Malanga Erithu - காவலையுடைத்தான லங்கையானது கலங்கும்படியாகத் தீக்கொளுவி தூது வந்த, Thoodhu Vanda - (பிராட்டிபக்கல்) தூத சொல்லவந்த குரங்குக்கே, Kurangukke - அனுமான் கையிலேயே உங்கள் தோன்றல் தேவியை, Ungal Thondral Deiviyai - உங்கள் ஸ்வாமியான பெருமாளுடைய தேவியான ஸீதையை விட்டுக் கொடாதே, Vittuk Kodaadhe - ஸமர்ப்பியாமல் ஆதர், Aadhar - அவிவேகிகளான நாங்கள் நின்று படுகின்றது அந்தோ, Ninru Padikindrathu Andho - இப்படி துவண்டு நின்று அநர்த்தப்பட வேண்டிற்றாயிற்று ஐயோ! |