திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1866 | பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மகா ராஜர் புருஷகரமாகத் தொழுதோம் – எங்களுக்கு இரங்க வேணும் – எங்கள் நாயகனே – லோகத்துக்கு அடைய பிரகாசனான ஆதித்யன் மகன் அன்றோ நீர் சர்வ நிர்வாககர் அன்றோ – நாங்கள் சொல்லச் செய்தே எங்களைக் கொல்லில் உங்களுக்கு அவத்யமாம் – தடம் பொங்கத்தம் பொங்கோ) 9 | புரங்கள் மூன்றுமோர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பில்
சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம்
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெங்கதிரோன் சிறுவா
குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-9 | பதவுரை Show / Hideஓர் மாத்திரை போதில், Or Maathirai Podhil - ஒரு கண்ணிமைப்பொழுதில் (- (தடம் பொங்கத்தம் பொங்கோ)) புரங்கள் மூன்றும், Purangal Moondrum - முப்புரங்களையும் பொங்கு எரிக்கு, Pongu Erikku - அக்நிஜ்வாலைக்கு இரை கண்டவன், Irai Kandanavan - இரையாக்கின ருத்ரனுடைய அம்பில், Ambil - அம்புகளிற்காட்டிலும் சரங்கன், Sarangkan - இந்த ராமபரணங்கள் கொடிது ஆய், Kodithu Aay - கொடியவைகளாய் அடுகின்ற, Adhigindra - பொசிக்கின்றன சாம்பவான், Sambavaan - ஸ்ரீஜாம்பவான் உடன் நிற்க, Udan Nirka - புருஷகாரமாகக் கூடநிற்க தொழுதோம், Thozhudhom - வணங்குகின்றோம் எந்தை பிரானே, Endhai Pirane - எங்கள் நாயகனே! இலங்கு வெம் கதிரோன்தான் சிறுவர், Ilangu Vem Kathironthan Siruvar - விளங்குகின்ற ஸூர்யனுக்குப் புதல்வனாய் குரங்குகட்கு அரசே, Kurangukadku Arase - வாநரங்கட்குப் பிரபுவான ஸுக்ரீவனே! எமக்கு நீ இரங்கு, Emakku Nee Irangu - எங்கள் விஷயத்திலே நீ இரங்கியருளவேணும் எம்மை கொல்லேல், Emmai Kollel - எங்களைக் கொல்லா தொழியவேணும் கூறினோம், Koornom - இந்தப் பிரார்த்தனையே அடுத்தடுத்துச் சொல்லுகின்றோம், |