திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1880 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1880பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவயவங்கள் தோறும் முழுசா முகத்தைப் பாரா முலை சுரக்கப் பண்ணாமல் மடியிலே இருந்தாயிற்று உண்பது – இது அடைய தரையிலே போகாமே உன் வாயிலேயாம்படி முலை யுண்ண வாராய்) 3
திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய் –10-4-3
பதவுரை Show / Hide
திருவின் பொலிந்த, Thiruvin Polintha - செல்வத்தினால் மிக்கவர்களாய்
எழில் ஆர், Ezil Aar - வடிவழகும் நிறைந்தவர்களான
ஆயர்தம் பிள்ளைகளோடு, Aayartham Pillaihalodhu - இடைப்பிள்ளைகளோடு கூட
தெருவில் திளைக்கின்ற, Theruvil Thilaikkindra - வீதியிலே விளையாடுகின்ற
நம்பீ, Nambi - பிரானே!
செய்கின்ற, Seigindra - நீ செய்துவருகிற
தீமைகள், Theemaigal - தீம்புகளை
கண்டிட்டு, Kandittu - பார்த்து (அதனாலுண்டான உவப்பினால்)
என் கொங்கையின், En Kongaiyin - என்னுடைய முலையினின்
தீம் பால், Theem Paal - இனிய பாலமுது
உருகி, Urugi - தானே உருகி
ஒட்டந்து, Ottandhu - வெள்ளமிட்டு
பாய்ந்திடுகின்ற, Paayndhidugindra - பெருகிப் பாழாய்ப் போகின்றது (அப்படி பாழாய்ப் போகாமே)
குடங்கால், Kudankaal - (எனது) மடியிலே
மருவி இருந்து, Maruvi Irundhu - பொருந்தியிருந்து
வாய், Vaai - வாயினால்
முலை உண்ண, Mulai Unna - முலைப்பாலுண்பதற்கு
நீ வாராய், Nee Vaarai - நீ வரவேணும்