திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1883 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1883பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தீமைகள் செய்யா நிற்புதி-கண்டு இருக்க ஆகர்ஷகமான தீம்புகளை செய்வுதி – அத்தீமை காண என் ஹிருதயம் உருகி முலை வழியே பாலாய் புறப்படா நின்றது – கண்கள் சிவப்பது-மூரி நிமிர்வது-கொட்டாவி கொள்வது -அழுவது -ஆகாதே) 6
பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசில் பெரிதும் வலியை கள்ள மனத்தில் உடையைக் காணவே தீமைகள் செய்தி உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் –10-4-6
பதவுரை Show / Hide
பிள்ளைகள் செய்வன செய்யாய், Pillaihal Seivana Seyyai - (உன்னோடொத்த பருவமுள்ள) பிள்ளைகள் செய்யும் தீம்புகளை நீ செய்கின்றிலை, (- (பால் அமுது உண்ண நீ வாராய்))
பேசில், Pesil - உன்னைப்பற்றிச் சொல்வோமாகில்
பெரிதும் வலியை, Peridhum Valiyai - மிகவும் மிடுக்குடையனாயிரா நின்றாய்,
மனத்தில், Manathil - நெஞ்சிலே
கள்ளம் உடைய, Kallam Udaiya - கபடத்தை வஹியாநின்றாய்,
காணவே, Kaanave - (தண்டிக்க வேண்டியவர்களும்) பார்த்துக்கொண்டிருக்கும்படியாக
தீமைகள், Theemaigal - தீம்புகளை
செய்தி, Seithi - செய்கின்றாய்,
என் உள்ளம் உருகி, En Ullam Urugi - என்னுடைய நெஞ்சு நீர்ப்பண்டமாகி
கொங்கை, Kongai - முலைகளும்
ஓட்டந்து பாய்ந்திடுகின்ற, Oottandhu Paayndhidugindra - பால் பெருகிப் பாயப்பெறுகின்றன
பள்ளி குறிப்பு செய்யாதே, Palli Kurippu Seyyadhe - (கொட்டாவி விடுதல் முதலிய) தூக்கக் களைச்செர்