திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1885 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1885பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாயாரைக் கண்டால் தீமையிலே ஓன்று பத்தாக பணைக்கும்–ஸ்ரீ நந்த கோபர்க்காயிற்று அஞ்சுவது அத்தாலே அவனுக்கு அச்சம் உறுத்துக்கைக்காக ஸ்ரீ யசோதை பிராட்டி சொல்லும் பாசுரம் ஆயிற்று) 8
உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன் உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம்போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் –10-4-8
பதவுரை Show / Hide
ஆழி அம்கையனே, Aazhi Amkaiyane - திருவாழியினால் அழகு பெற்ற திருக்கையை யுடையவனே! (- (நீ செய்கிற தீமைகளைக் கண்டால்))
உந்தம் அடிகள், Undham Adigal - உங்கள் பிதாவாகிய நந்தகோபர்
முனிவர், Munivar - சீறுவர்
நான், Naan - நானோவென்றால்
என் கையில் கோலால், En Kaiyil Kolaal - என் கையிலுள்ள கொம்பினால்
உன்னை நொந்திட மோதவும் கில்லேன், Unnai Nondhida Modhavum Killeen - உன்னை நோகும்படி அடிக்கவும் மாட்டேன்,
உங்கள் தம் ஆ நிரை எல்லாம், Ungal Tham Aa Nirai Ellam - உங்களுடைய பசுக்கூட்டங்களெல்லாம்
வந்து புகுதரும் போது, Vandhu Pugudharum Podhu - (காடுகளில் மேய்ந்து) மீண்டு வந்து (ஊர்க்குள்) புகும்போது
வானிடை தெய்வங்கள் காண, Vaanidai Deivangal Kaan - ஆகாசத்திலுள்ள தேவதைகள் (எச்சிற்கண்ணால்) காணுமாறு
அந்தியம்போது, Andhiyam Podhu - மாலைப்பொழுதிலே
அங்கு நில்லேல், Angu Nillel - நாற்கந்தியிலே நிற்கவேண்டா
வாராய், Vaarai - (என்னருகே) வந்திடாய்