திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1888 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவைக் காட்டி வாழ்வித்ததுவே அன்றிக்கே சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும்) 1 | பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி –10-5-1 | பதவுரை Show / Hideபூ கோதை ஆய்ச்சி, Poo Kothai Aaychchi - புஷ்பங்களணிந்த மயிர்முடியை யுடையளான யசோதையினால் (- (சப்பாணி)) கடை, Kadai - கடையப்பட்ட வெண்ணெய், Vennai - வெண்ணெயை புக்கு உண்ண, Pukku Unna - (கள்ளத்தனமாய்ப்) புகுந்து அமுது செய்தவளவில் அவள், Aval - அந்த யசோதை ஆங்கு, Aangu - அவ்விடத்திலேயே ஆர்த்து, Aarththu - (தாம்பினால்) கட்டி புடைக்க, Pudaikka - அடிக்க புடை உண்டு, Pudai Undu - அடிபட்டு ஏங்கி இருந்து, Aengi Irundhu - (சற்றுப்போது) அழுது கொண்டிருந்த (பிறகு) சிணுங்கி, Sinungi - சீராட்டப்பெற்று விளையாடும், Vilaiyadum - விளையாடுகின்ற ஓங்கு ஓதம் வண்ணனே, Ongu Otham Vannane - தேங்கின கடல் போன்ற வடிவையுடையவனே! சப்பாணி, Sappaani - சப்பாணி கொட்டவேணும் ஒளி மணி வண்ணனே, Oli Mani Vannane - ஒளிபொருந்திய மணி போன்ற நிறமுடையவனே! |