திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1889 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தயிரையும் நெய்யையும் களவு கண்டு புசிக்கை போராததொரு செயல் இறே இப்படி போராத செயலைச் செய்தோம் என்று லஜ்ஜிக்கவும் அறியாதே தனக்கு பொருந்தின செயலைச் செய்தானாய் அத்தாலே என்னை எழுதிக் கொண்டு இருக்கிறவனே – தனக்குத் தகுதியான செயலைச் செய்தானாய் செய்ததுக்கு லஜ்ஜிக்கவும் கூட அறியாத மௌக்த்த்யத்திலே யாயிற்று இவளும் தோற்றது) 2 | தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்
டே ஏய் எம்பிராக்கள் இரு நிலத்து எங்கள் தம்
ஆயர் அழக வடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-2 | பதவுரை Show / Hideதாயர் மனங்கள் தடிப்ப, Thaayar Manangal Thadippa - தாய்மாருடைய நெஞ்சு துடிக்கும்படியாக (- (சப்பாணி கொட்டாய்) (சப்பாணி கொட்டாய்)) தயிர் நெய் உண்டு, Thayir Ney Undu - தயிரையும் நெய்யையும் வாரி யமுதுசெய்து ஏய், Ey - பொருத்தமான காரியம் செய்த்தாக நினைத்திருக்கிற எம் பிராக்கள், Em Pirakkal - எம்பெருமானே! இரு நிலத்து, Iru Nilathu - விசாலமான இப்பூமண்டலத்திலே எங்கள் தம் ஆயர், Engal Tham Aayar - எங்கள் இடைச்சாதிக்குள்ளே அழக, Azhaga - அழகிற் சிறந்தவனே! அரவிந்தம், Aravindham - தாமரைப் பூப்போன்ற அடிகள் வாயவனே, Adigal Vaayavane - திருவடிகளையும் திருமுகத்தையு முடையவனெ! மால் வண்ணனே, Maal Vannane - கரிய திருமேனியனே! |