திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1890 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாகவதர்களோடே அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே –இங்கனே தாவா மோரை உருட்டி பிரயோஜனபரமான தயிரையும் நெய்யையும் அமுது செய்யும் யாயிற்று- உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே ஸ்ரீ தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே – எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய்) 3 | தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம்மோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி –10-5-3 | பதவுரை Show / Hideதா, Thaa - தாவி (- (சப்பாணி கொட்டாய்) (தாமரைக் கண்ணனே சப்பாணி)) மோர் உருட்டி, Moar Urutti - மோர்ப்பானைகளை உருட்டி விட்டு தயிர் நெய் விழுங்கிட்டு, Thayir Ney Vizhungittu - தயிரையும் நெய்யையும் விழுங்கிவிட்டு தாமோ தவழ்வர் என்று, Thamo Thavazhvar Endru - ‘இப்படி பெரிய காரியத்தைச் செய்தவரோ (ஒன்று மறியாத குழந்தை போலத்) தவழ்கின்றார்’ என்று சொல்லி ஆய்ச்சியர் தாம், Aaychiyar Tham - இடைச்சிகள் தாம்பினால் ஆர்க்க, Thampinaal Aarkka - தாம்பால் கட்டவும் கையால் மோதர, Kaiyala Modhara - கைகளால் அடிக்கவும் தழும்பு இருந்த, Thazhumbu Irundha - அதனால் காய்ப்பேறிக் கிடக்கின்ற தாமோதரா, Thamodharah - தாமோதரனே! |