திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1891 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1891பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே லோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற மற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் – ஜாத்யுசிதமான வ்ருத்தியை உடையவனே கன்றுகள் மேய்க்குமவனே) 4
பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து உற்றார் ஒருவரும் இன்றி உலகினில் மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-4
பதவுரை Show / Hide
பெற்றார், Petraar - தாய் தந்தையருடைய (- (சப்பாணி கொட்டாய்))
தளை, Thalai - கால்விலங்கு
கழல, Kazhala - கழன்று விழும்படி
பேர்ந்து, Perndhu - வந்தவதரித்து
அங்கு, Angu - அவ்விடத்தில்
அயலிடத்து உற்றார் ஒருவரும் இன்றி, Ayaliadathu Utrar Oruvarum Inri - நெருங்கின உறவுமுறையார் ஒருவருமில்லாமற்போக
உலகினில் மற்றாரும் அஞ்ச, Ulaginil Matraarum Anja - உலகத்திலுள்ள எல்லாரும் அஞ்சும்படியாக
வஞ்கம் பெண் நஞ்ச உண்ட, Vanjkam Pen Nanja Unda - வஞ்சனையே வடிவாக வந்த பூதனையின் (முலையில் தடவின) விஷயத்தை அழுது செய்தருளின
கன்று ஆயனே, Kandru Aayaney - கோபாலகிருஷ்ணனே!
கார் வண்ணனே, Kaar Vannane - காளமேகநிறத்தனே!