திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1892 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உனக்கு பருத்த அப்பங்களை இடைச்சிகள் தருவர்கள் –அவர்கள் பேரிட்டு எங்களை வாழ்விக்க வேணும் – கண்டு கொண்டு இருக்க வேண்டும் கைகளால் சப்பாணி கொட்ட வேணும்) 5 | சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி –10-5-5 | பதவுரை Show / Hideபேய்ச்சி முலை உண்ணட பிள்ளாய், Peychchi Mulai Unnada Pillai - பூதனையின் முலையை உறிஞ்சியுண்டே கண்ணபிரானே! (- (ஓர் ஆயிரம் சப்பாணி) (தடங்கைகளால் சப்பாணி கொட்டாய்)) வரம் தர, Varam Thara - என் கோரிக்கையை நீ நிறைவேற்றுதற்காக நின்னை, Ninnai - உன்னை சோத்தம் என, Soththam Ena - சோத்தமென்று சொல்லிக்கொண்டு தொழுவன், Thozhuvan - தொழுகின்றேன் ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகள் பெரியன அப்பம் தருவர், Periyana Appam Tharuvar - பெரிய அப்பங்களை உனக்குக் கொடுப்பர்கள், அவர்க்காக சாற்றி, Avarkkaaga Saartti - அவர்களுக்காக வென்று ஒரு வியாஜமிட்டு |