திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1893 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கருவிளைப் பூவைக் காட்டா நின்றுள்ள நிறத்தையும் – ஆதி ராஜ்ய சூசகமான முடியையும் உடையனாய்க் கொண்டு ஸ்ரீ நந்த கோபர் கொண்டாடி வளர்க்க-வளர்ந்த செருக்கை உடையவனே – ஜாத்யுசிதமாம் படி குடமாடி வாழ்வித்த நீ சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும்) 6 | கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நானவலப்பம் தருவன் கருவிளைப்
பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே
கோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி –10-5-6 | பதவுரை Show / Hideகருவிளைப்பூ அவர், Karuvilaippoo Avar - காக்கணம் பூவைக் காட்டுகின்ற நிறமுடையவனே! (- (சப்பாணி கொட்டாய்)) நீள் முடி, Neel Mudi - நீண்ட திருவபிஷேக முடையவனே! நந்தன் தன் போர் ஏறே, Nandan Than Por Aere - நந்தகோபன் வளர்க்க வளர்ந்த செருக்கின காளையே! கோவலனே, Kovalane - பசுமேய்க்க வல்லவனெ! உன் வயிறு கேவலம் அன்று, Un Vayiru Kevalam Andru - உன் வயிறு ஸாமந்யமானதன்று, நான் வயிற்றுக்கு அவல் அப்பம் தருவன், Naan Vayirukku Aval Appam Tharuven - (உனது பெரிய) வயிற்றுக்குப் போரும்படியாக அவலும் அப்பமும் நான் தருவேன், குடம் ஆடீ, Kudam Aadi - குடக்கூத்தாடினவனே! |