திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1894 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிள்ளைத் தனத்திலே கண் அழிவு அற்று இருக்கச் செய்தே உன்னை நோக்கித் தந்து உபகரித்தவனே – அன்று பூதனை தன்னை முடித்து உன்னை நோக்கித் தந்த நீ இன்று நான் சொல்லிற்று செய்ய வேண்டாவோ) 7 | புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத்
துள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி –10-5-7 | பதவுரை Show / Hideபுள்ளினை வாய் பிளந்து, Pullinai Vaai Pilandhu - பகாசுரனுடைய வாயைக் கிழித்தெறிந்து (- (சப்பாணி கொட்டாய்,) (பேய் முலை உண்டானே! சப்பாணி)) பூ குருந்தம் சாய்த்து, Poo Kurundham Saaythu - பூத்திருந்த குருந்த மரத்தைச் சாய்த்து முறித்து துள்ளி விளையாடி, Thulli Vilaiyaadi - நிலத்தில் நில்லாமல் விளையாடல்களைச் செய்து தூங்கு உறி வெண்ணெயை, Thoongu Uri Vennaiyai - தொங்குகின்ற உறியிலுள்ள வெண்ணெயை அள்ளிய, Alliya - வாரியெடுத்த கையால், Kaiyala - கைகளாலே அடியேன் முலை நெருடும், Adiyen Mulai Nerudum - என்னுடைய முலையை (ப்பால் சுரப்பதற்காக) நெருடுகின்ற பிள்ளை பிரான், Pillai Piraan - பிள்ளையாயும் பிரவுவாயுமிருப்பவனே! |