திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1895 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பேய் என்று அவளை புத்தி பண்ணி முலை வழியே அவளைப் பிடித்து முலை உண்டு அவளை முடித்த திருப் பவளத்தை உடையவனே – உகவாதாரை அழியச் செய்வுதி-உகப்பார் சொல்லிற்றும் செய்ய வேண்டாவோ) 8 | யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாயா வலவைப் பெண் வந்து முலை தரப்
பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-8 | பதவுரை Show / Hideயாயும், Yaayum - பெற்ற தாயாகிய நானும் (- (சப்பாணி கொட்டாய்) (மால் வண்ணனே! சப்பாணி கொட்டாய்)) பிறரும், Pirarum - மற்றுமுள்ளவர்களும் அறியாத, Ariyadha - கண்விழித்திருக்கப் பெறாமல் உறங்கிக் கொண்டிருந்த யாமத்து, Yaamathu - நடுச்சாமத்திலே மாயம், Maayam - வஞ்சகையாய் அலவை பெண், Alavai Pen - துஷ்டஸ்த்ரீயான பூதனை வந்து, Vandhu - (கம்ஸனால் ஏவப்பட்டுத் திருவாய்ப்பாடிக்கு) வந்து முலை தா, Mulai Thaa - முலைகொடுத்தவளவிலே அவளை, Avalai - அப்பூதனையை பேய் என்று பிடித்து, Pei Endrupidithu - பேய்ச்சி யென்றறிந்து பிடித்துக்கொண்டு உயிர் உண்ட, Uyir Unda - (அம்முலைவழியே அவளது) பிராணனைக் கவர்ந்த வாயவனே, Vaivane - திருப்பவளத்தை யுடையவனே! |