திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1896 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1896பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூதனை வரும் அளவும் ஆறி இருந்து கிட்டிக் கொண்டு தப்பாத படி மேல் விழுந்து பிடித்து முலை உண்டு அவளை முடித்து தன்னைக் காத்த மகோதாரனே – உதாராராய் இருப்பாருக்கு அபேஷிதங்களை எல்லாம் செய்ய வேண்டாவோ) 9
கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட வள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-9
பதவுரை Show / Hide
கள்ளம் குழவி ஆய், Kallam Kuzhavi Aayi - மாயக் குழந்தையாய்ப் பிறந்து
சகடத்தை, Sakadatthai - (அஸுரன் ஆவேசித்திருந்த வண்டியை
காலால் தள்ளி உதைத்திட்டு, Kaalal Thalli Uthaithittu - திருவடியாலே தள்ளி யுதைத்தவனாயும்
தாய் ஆய் வருவாளை, Thaai Aayi Varuvaalai - தாய்வேஷம் பூண்டு வந்த பூதனையை
மெள்ள தொடர்ந்து பிடித்து, Mella Thodarndupidithu - விதானித்திருந்து மேல் விழுந்து பிடித்து
ஆர் உயிர், Aar Uyir - (அவளது) அருமையான உயிரை
உண்ட, Unda - கவர்ந்தவனான
வள்ளலே, Vallale - உதாரனே!
சப்பாணி கொண்டாய், Chappaani Kondaai - பால் வண்ணனே! சப்பாணி கொட்டாய்