திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1897 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1897பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பேராளன் –ஸ்ரீ நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -என்னா-அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே பேராளன் -என்கிறார் – இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது – ஸ்ரீ பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று – இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது தம்மை அறியாமை இவ்வனுபவம் தானே பிறருக்கும் பலமாய் இருக்கிறது) 10
காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன் பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த் தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10
பதவுரை Show / Hide
கார் ஆர் புயல் கை, Kaar Aar Puyal Kai - கார்காலத்து நிறையநீர் கொண்டெழுந்த மேகம் போன்ற ஔதார்யமுடையவராய் (- (சப்பாணி கொட்டாய்) (சப்பாணி கொட்டாய்))
மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவராய்
பேராளன், Peraalan - பெருமை பொருந்தியவரான
கலி கன்றி, Kali Kankri - திருமங்கையாழ்வாருடைய
நெஞ்சில், Nenjil - திருவுள்ளத்திலே
பிரியாது, Priyaadhu - ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாமல்
இடம் கொண்ட, Idam Konda - நித்யவாஸம் பண்ணுகின்ற
சீரானா, Seerana - சீர்மை பொருந்தியவனே!
செம் தாமரை கண்ணா, Sem Thaamarai Kanna - செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடையவனே!
தண் துழாய் தார் ஆளா, Than Thuzhai Thar Aala - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்துள்ளவனே!
தட மார்வா, Thad Marvaa - விசாலமான திருமார்வை யுடையவனே!