திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1898 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1898பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபதேசத்தாலும் அனுஷ்டானத்தாலுமாக அற நூல்-வேதம் விஸ்த்ருதமாம் படி பண்ணியவன் சந்திர சூரியர்களும் பூமியும் திரைக் கிளப்பத்தை உடைத்தான் பெரிய கடலும் மலைகளும் அக்னியும் இவை அடைய நெருக்கிக் கொடு புகும்படியாக ஸ்லாக்கியமான மிடற்றை – இவை புகும் அளவும் – விரித்துக் கொண்டு இருந்தவன் கிடீர் இன்று தயிரையும் வெண்ணையும் களவு கண்டு-அமுது செய்து-ஓர் இடைச்சி கையாலே கட்டுண்டு அடியுண்டு-ஒரு பிரதிகிரியை அற்றுப் போக மாட்டாதே -இருக்கிறான் –என்கிறார் முதல் பாசுரத்தில் காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேன் -திருவாய் மொழி -10-8-2-என்கிற பாட்டின் படியே) 1
எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1
பதவுரை Show / Hide
நான் நாரணன் ஆய், Naan Naaranan Aay - (சிஷ்யனும் ஆசார்யனுமாக) நாநாராயணரூபியாய்
உலகத்து, Ulagathu - லோகத்திலே
அறம் நூல் சிங்காமை விரித்தவன், Aram Nool Singamai Viriththavan - அறநெறிகளைத் தெஜீவிக்கும் நூலாகியவேதம் சுருங்கிப் போகாதபடி அதை விஸ்தரிப்பித்தவனாயும்
எம்பெருமான், Emperumaan - எமக்கு ஸ்வாமியாயும்
அது அன்றியும், Adhu Andriyum - அவ்வளவு மல்லாமல்
செம் சுடரும், Sem Sudarum - சந்திர ஸூர்யர்களும்
நிலனும், Nilanum - பூமியும்
பொங்கு ஆர், Pongu Aar - பொங்குதல் பொருந்திய ஸமுத்ரங்களும்
பொருப்பும், Poruppum - மலைகளும்
நெருப்பும், Neruppum - அக்நியும் (ஆகிய இவையடங்கலும்)
நெருக்கி, Nerukki - ஒன்றின்மேலோன்றாய்
புக அத்தனை போது, Puga Aththanai Podhu - உள்ளே புகு மளவும்
பொன் மிடறு, Pon Midaru - திருவயிற்றை
அங்காந்தவன் காண்மின், Angaanthavan Kaanmin - விவரித்துக்கொண்டிருந்தவனன்றோ
இன்று, Indru - இப்போது
அளை, Alai - தயிரையும்
வெண்ணெய், Vennai - வெண்ணெயையும்
உண்டு, Undu - (திருடி) உட்கொண்டு
ஆய்ச்சியால், Aaychiyal - இடைச்சிகளால்
ஆப்புண்டிருந்தவன், Aappundirundhavan - (தாம்பால்) கட்டுண்டிருக்கிறான்,
இது ஒப்பது ஓர் மாயம், Idhu Oppathu Oru Maayam - இதுபோன்ற ஆச்சரியம்
எங்கானும், Engaanum - எங்கேனு மோரிடத்திலாவது
உண்டே, Unde - கண்டதுண்டோ?