திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1900 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1900பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஹிரண்யாசுரன் உடைய முரட்டு உடலை வளைந்த உகிராலே இரண்டாகக் கிழித்தவன் கிடீர் இன்று ஒரு அபலையால் கட்டுண்டு இருக்கிறான்) 3
உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வ்லியாலவர்பால் வயிரம் விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால் அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-3
பதவுரை Show / Hide
உலப்பு இல் வலியால், Ulappu Il Valiyal - எல்லையில்லாத வலிமையினால் (- (அதுவுமல்லாமல்) (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்))
எழுந்த, Ezhundha - பெரிய கிளர்த்தியோடே தோன்றி
மது கைடவர்கள் அவர்பால், Madhu Kaidavargal Avarpaal - மதுகடைபர்களென்கிற அவ்வசுரர்களோடே
வயிரம், Vayiram - பகை
விளைந்திட்டது என்று எண்ணி, Vilaindhittathu Endru Enni - உண்டாகிவிட்ட தென்றறிந்து
உளைந்திட்டு, Ulaindhittu - அஞ்சி நடுங்கி
விண்ணோர், Vinnor - தேவர்கள்
பரவ, Parava - (திருவடிகளிலே தொழுது) துதிக்க,
அவர், Avar - அந்த மதுகைடபர்களுடைய
நாள், Naal - ஆயுளை
ஒழித்த, Ozhitha - முடித்த
பெருமான், Perumaan - ஸர்பேச்வரனாய்
முனநாள், Munan Naal - முற்காலத்தில்
வளைந்திட்ட வில்லாளி, Valaindhitta Villali - வளைந்தவில்லைக் கையிலேந்தியுள்ளவனும்
வல் வாள் எயிறு, Val Vaal Eiyiru - வலிமை பொருந்திப் பிறங்கிய பற்களை யுடையவனும்
மலை போல், Malai Pol - மலைபோன்றவனுமான
அவுணம், Avunam - இரணியாசுரனுடைய
உடல், Udal - உடலை
வள் உகிரால், Val Ukiral - கூர்மையான நகங்களினால்
அளைந்திட்ட வன் காண்மின், Alaintitta Van Kanmin - இரண்டாகக் கிழித்தவனன்றோ