திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1902 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1902பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகங்கள் ஏழையும் தன் ஆஞ்ஞையாலே நடத்தினவன் கிடீர் இன்று தன் ஆஞ்ஞை அழிந்து ஓர் அபலை கையிலே கட்டுண்டு அடி யுண்கிறான்) 5
நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம் தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன் வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ் ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-5
பதவுரை Show / Hide
அடியார் படும், Adiyar Padum - பக்தர்கள் அநுபவிக்கிற (- (அது அன்றியும் முன்;) (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்))
ஆழ் தயராய் எல்லாம், Aaz Thayarai Ellam - கொடிய பாப பலன்களெல்லாம்
தீண்டாமை, Theendamai - அவர்களை ஸ்பர்சியாதபடி
நினைந்து, Ninaindhu - திருவுள்ளம்பற்றி
குறள் ஆய், Kural Aay - வாமணமூர்த்தியாகி
நெடு வான் அளவும், Nedu Vaan Alavum - பரம்பிய ஆகாசமெங்கும்
நீண்டான், Neendaan - வளர்ந்தவனாய்,
இமையோர் அளவும், Imaiyor Alavum - நித்யஸூரிகள்ளவும்
செல, Sela - செல்லும்படியாக
வைத்த, Vaitha - திருவடிகளை உயர்த்தி வைத்தருளின
பிரான், Piraan - உபகாரகனாய்
வேண்டாமை, Veendaamai - (‘எல்லாரையும் யமபடர்கள் ஆராயக்கடவர்கள்’ என்று தானே யிட்ட கட்டளையை) வேண்டாமையினாலே
நமன் தமர் என் தமரை வினவப்பெறுவார் அலர் என்று, Naman Thamar En Thamarai Vinavapperuvar Alar Endru - ;யமபடர்கள் எம்மடியாரை ஆராயக்கடவர்களல்லார் என்று நியமித்தருளி
உலகு ஏழ் ஆண்டான் அவன் காண்மின், Ulaku Ezh Aandaan Avan Kaanmin - உலகங்களையெல்லாம் ரக்ஷித்தருளினவனன்றோ