திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1903 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1903பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சஹஸ்ர பாஹ் வர்ஜுனனுடைய சினத்தை உடைத்தான தோள்கள் ஆயிரத்தையும் அழகுக்குப் பிடித்த மழுவாலே துணித்துப் பொகட்டவன் கிடீர் –இன்று ஓர் அபலை கையாலே கட்டுண்டு இருந்தான்) 6
பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம் ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் திருமால் அதுவன்றியும் முன் தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால் அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –10-6-6
பதவுரை Show / Hide
பழித்திட்ட, Pazhithitta - சாஸ்திரங்களில் இகழப்பட்ட (- (அது அன்றியும் முன்) (இன்று ஆய்ச்சியால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்))
இன்பம், Inbam - சிற்றின்பமாகிற
பயன், Payan - அற்ப பலன்களை
பற்று அறுத்து, Patru Aruththu - வாசனையோடே விட்டிட்டு
பணிந்து, Panindhu - திருவடிகளிலே விழுந்து
ஏத்த வல்லார், Aetha Vallar - துதிக்கவல்லவர்களுடைய
துயர் ஆய எல்லாம், Thuyar Aaya Ellam - துன்பமென்று பேர்பெற்றவை யெல்லாவற்றையும்
ஒழித்திட்டு, Ozhiththittu - கழித்தருளி
அவரை, Avarai - அவர்களை
தனக்கு ஆக்க வல்ல, Thanakku Aakka Valla - தனக்கு நித்யகிங்கரராகச் செய்து கொள்ளவல்ல
பெருமான், Perumaan - ஸ்வாமியாய்
திருமால், Tirumal - ச்ரியபதியாய்
தெழித்திட்டு, Thezhiththittu - பெரிய ஆரவாரத்தைச் செய்துகொண்டு
எழுந்து, Ezhunthu - மார்புத்தட்டிக் கிளர்ந்து
எதிர் நின்ற, Edhir Nindra - (போர்புரிய) எதிரே வந்து நின்ற
மன்னன், Mannan - கதர்த்தவீர்யார்ஜுன்னென்னும்) அரசனுடைய
சினம், Sinam - கோவத் துடிப்புக்கொண்ட
தோள் அவை ஆயிரமும், Thol Avai Aayirathum - ஆயிரந்தோள்களையும்
மழுவால், Mazhuvaal - மழுப்படையினால்
அழித்திட்ட வன் காண்மின், Azhiththitta Van Kaanmin - அழித்தவனான பெருமானன்றோ