திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1906 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1906பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மகாராஜரை விஸ்வசிப்பிக்கைக்காக மராமரங்கள் ஏழையும் எய்து – மலை போலே இருக்கிற வடிவை உடையளாய் இருக்கச் செய்தேயும் ஸ்ரீ பிராட்டி போலே தன்னை சாமானை யாக புத்தி பண்ணி வந்த சூர்பணகைக்கு வைரூப்யத்தைப் பண்ணிவிட்டவன் கிடீர் – ப்ரதிகூல்யையாய் வருகையாலே இறே வைரூப்யத்தை விளைத்து விட்டது – அனுகூல்யைக்கு அகப்படாமை இல்லை இறே) 9
சுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது திரிந்திட்டு இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள் வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-9
பதவுரை Show / Hide
செம் கேழ், Sem Kezh - சிவந்த நிறமுடையனவான (- (சுரிந்திட்ட சுருண்டிராநின்ற) (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்))
உளை, Ulai - பிடரி மயிர்களையுடைத்தாய்க் கொண்டு
பொங்கு, Pongu - களித்துவந்த
அரிமா, Arimaa - குதிரைவடிவனான கேசியென்னுமசுரன்
தொலைய, Tholaiya - முடிந்து போம்படியாக
பிரியாது, Priyaadhu - அதனைவிடாதே
சென்று எய்தி, Sendru Eydhi - சென்று கிட்டி,
எய்தாது இரிந்திட்டு இடம் கொண்டு அடங்காத அதன்வாய், Eydhaadhu Irindittu Idam Kondu Adangadha Adanvaai - கிட்டவாராமல் அங்குமிங்கும் திரிந்து கொண்டு அவகாசங்கொடாதே அவிதேய மாய்க்கிடந்த அந்தக் குதிரையின் வாயை
இரு கூறு செய்த, Iru Kooru Seitha - இருதுண்டமாக்கி யொழித்த
பெருமான், Perumaan - ஸ்வாமியாய்
முனநாள், Munan Naal - (அன்றியும்) முன்பொரு காலத்திலே
வரிந்திட்ட, Varinditta - கட்டுடைத்தான
வில்லால், Villal - வில்லாலே
மரம் ஏழும், Maram Ezham - மராமரங்களேழையும்
எய்து, Eythu - முறித்தவனாய்,
மலை போல் உருவம், Malai Pol Uruvam - மலைபோன்றவடிவையுடையளான
ஒரு இராக்கதி, Oru Iraakkathi - சூர்ப்பணகையென்னும் ஒரு ராக்ஷஸியினுடைய
மூக்கு, Mooku - மூக்கை
அரிந்திட்ட வன் காண்மின், Arinthitta Van Kaanmin - அறுத்தொழித்தவனான பெருமானன்றோ