திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1907 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1907பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு காலும் துக்கத்தை ப்ராபியார்கள் –நிரதிசய ஆனந்தத்தை ப்ராபித்து ப்ரஹ்மாதிகள் குடி இருப்புக்கும் அவ்வருகான பரம பதத்தை ப்ராபிப்பார்) 10
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய் அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல் நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார் என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே –10-6-10
பதவுரை Show / Hide
நின்றார் முகப்பு, Ninraar Mukappu - தன்னைக் காணவந்து நின்றவர்களெதிரே
சிறிதும் நினையான், Sirithum Ninaithyaan - கொஞ்சமும் வெட்கப்பட வறியாதவனாய்
வயிற்றை நிறைப்பான், Vayittrai Niraippaan - வயிற்றை நிறைப்பதற்காக
ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகளுடைய
உறி, Uri - உறிகளிலேயிருந்த
பால், Paal - பாலையும்
தயிர், Thayir - தயிரையும்
நெய், Ney - நெய்யையும்
வெண்ணெய், Vennai - வெண்ணெயையும்
விழுங்கி, Vizhungi - (களவாடி) அமுதுசெய்து
அன்று, Anru - அப்போது
உரலோடு, Uralodu - உரலோடே
ஆப்புண்டிருந்த, Aappundirundha - கட்டுண்டிருந்த
பெருமான், Perumaan - கண்ணபிரானுடைய
அடிமேல், Adimeel - திருவடிகளின்மேலே
நன்று ஆய தொல் சீர், Nandru Aaya Thol Seer - விலக்ஷணமான ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயையுடையராய்
வயல் மங்கையர், Vayal Mangaiyar - வயல் சூழ்ந்த மங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான
கலியன், Kalyan - ஆழ்வார்
ஒலி செய்  –, Oli Sei - அருளிச்செய்த
தமிர் மாலை, Tamir Maalai - இப்பாசுரங்களை
வல்லார், Vallaar - கற்றுவல்லவர்கள்
என்றாலும், Endraalum - ஒருகாலும்
இடர் எய்தார், Idar Eydhaar - துன்பமடையார்கள்
இன்பம் எய்தி, Inbam Eydhi - நித்யாநந்தத்தைப் பெற்று
இமையோர்க்கும் அப்பால செல, Imaiyorkkum Appaal Sela - தேவர்களுக்கும் அவ்வருகான பரமபதத்தையடையும்படியான பாக்கியத்தை
எய்துவார், Eydhuvaar - பெறுவார்கள்.