திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1908 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1908பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் சொல்லிற்று செய்தல்-தமப்பனார் சொல்லிற்றைச் செய்தல் செய்யாத பருவம் இறே உன் பருவம் – நானும் சொல்லிற்றிலேன் தமப்பனாரும் அருளிச் செய்திலர் – நீங்கள் எல்லாரும் பிள்ளை பெற்று வளர்க்கிறி கோளே – நான் இனிச் செய்வது என் – ஸூசக மாத்ரமே அன்றிக்கே -காரகமும் உண்டாய் இருந்தது -காரகம் -காரணம்) 1
மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை ஊனமுடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன் தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1
பதவுரை Show / Hide
உங்கள் ஆயர் குலம், Ungal Aayar Kulam - ‘உங்களிடைக்குலமானது (- (தாய்தந்தையரான நாங்களிருவரும் இப்படி உதாஸீநராயிருப்பதுவே காரணமாக) (நான் என் செய்கேன்?-))
மானம் உடைத்து அதனால், Maanam Udaithu Adhanaal - மானத்தோடு வாழுந்தன்மையுடைய தாகையாலே
பிறர் மக்கள் தம்மை, Piraar Makkal Thammai - அயலாருடைய பெண்பிள்ளைகளிடத்திலே
ஊனம் உடையன செய்ய பெறாய் என்று, Oonam Udaiyana Seiyya Perai Endru - இழிவான செயல்களைச் செய்யாதொழிய வேணும்’ என்று
இரப்பன், Irappan - வேண்டிக் கொள்வனேயன்றி
உரப்ப கில்லேன், Urapa Killeen - வெருட்டி வார்த்தை சொல்லியறியேன்
நங்கைகாள், Nangai Kaal - பெண்பிள்ளைகாள்!
நானும் உரைத்திலேன், Naanum Uraiththileen - (தாயாகிய) நானும் ஒன்று (சீறிச்) சொல்லியறியேன்,
நந்தன், Nandhan - (தகப்பனாரான) நந்தகோபரும்
பணித்திலன், Paniththilan - ஒன்று சொல்லமாட்டார்,
தானும், Thaanum - கண்ணபிரான்தானும்
ஓர் கன்னியும், Oru Kanniyum - ஒரு இளவாய்க் கன்னியுமாய்க்கொண்டு
கீழை அகத்து, Keelai Akathu - கீழண்டை வீட்டில்
தயிர் கடை கின்றான் போலும், Thayir Kadai Kindraan Polum - தயிர் கடைந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது,