திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1909 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1909பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய இது செய்யக் கடவார் இல்லை – வந்தாருக்கு அறிவிக்குமது தவிர்ந்து அழைத்துக் காட்ட வேண்டும் அளவாய் வந்து விழுந்தது – கடைந்து சேமித்து வைத்த வெண்ணெயே அன்றிக்கே கடைககைக்கு யோக்யமான பாலும் கூடக் கண்டிலேன்) 2
காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன் மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2
பதவுரை Show / Hide
காலை எழுந், Kaala Ezhun - விடியற்காலத்திலெழுந்து (- (பாவியேன் என் செய்கேன்என் செய்கேனோ))
கடைந்த, Kadaindha - (வருந்திக்) கடைந்த
இ மோர், I Mor - இந்த மோரை
விற்க, Virka - விற்பனை செய்ய
போகின்றேன், Pogindren - (தெருவேறப்) போகா நின்றநான்
கண்டே போனேன், Kande Ponaen - (கண்ணபிரான் எதிரே வருவதைப்) பார்த்தே (திடுக்கிட்டுக் கொண்டே) போனேன்,
மாலை நறு குஞ்சி, Maala Naru Kunchi - பூவணிந்து மணங்கமழப் பெற்ற மயிர்முடியையுடைய
நந்தன் மகன் அல்லால், Nandan Magan Allaal - அக்கண்ணபிரான் தவிர
மற்று வந்தாரும் இல்லை, Mattru Vandhaarum Illai - மற்றொருவரும் இங்கு வரப்ரஸக்தியில்லை
மேலே அகத்து நங்காய், Meelae Akathu Nangkaai - மேலண்டை வீட்டுப் பெண்பிள்ளாய்! (அசேரதாய்)
வந்து காண்மின்கள், Vandhu Kaanminkal - (கண்ணன் செய்த களவுகளை இங்கே) வந்துபாருங்கள்,
வெண்ணெயை அன்று, Vennaiy Andru - (கடைந்து வைத்த) வெண்ணெயை மாத்திரமல்லாமல்
பதின் குடம், Pathin Kudam - பத்துக் குடங்களிலே
இருந்த, Irundha - (கடைவதற்காகச் சேமித்து) வைத்திருந்த
பாலும், Paalum - பாலையும்
கண்டிலேன், Kandilein - காண்கின்றிலேன்