திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1910 | பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் பருவத்து அளவல்ல வயிற்றின் பெருமை – வெண்ணெயே அன்றிக்கே –இவ் வேழ் உலகும் கொள்ளும் – இத் தயிரும் பாலும் பாழ் போகாமே ஒரு பிள்ளை வேணும் என்று அன்றோ நீ பெற்றது – அவன் இப்பது அமுது செய்தான் ஆகில் நீ இப்பாடு படுகிறது என் -என்ன – அவனுக்கு இது சாத்மியாது ஒழியில்-செய்வது என் என்று அன்றோ அஞ்சுகிறது நான்) 3 | தெள்ளியவாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ –10-7-3 | பதவுரை Show / Hideதெள்ளிய வாய், Thelliya Vaai - தெளிந்த திருப்பவளத்தை யுடையனான (- (நங்கைகாள்) (செய்த களவை மறைக்க வொண்ணாதபடி)) சிறியான், Siriyaaan - இச்சிறு பிள்ளையானவன் உறி மேலைத் தடா நிறைந்த, Uri Melai Thadaa Niraindha - உறையின் மேலிலுள்ள பானையிலே நிரம்பியிருந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த, Velli Malai Irundhaal Oththa - வெள்ளிமலை போன்றிருந்த வெண்ணெயை, Vennai - வெண்ணையை வாரி விழுங்கியிட்டு, Vaari Vizhunkiyittu - (தன் தடங்கையார) வாரி விழுங்கிவிட்டு கள்வன் உறங்குகின்றான், Kalvan Urangugiraan - கள்ளத் தூக்கம் தூக்குகின்றான் வந்து காண்மின்கள், Vandhu Kaanminkal - வந்துபாருங்கள் கை எல்லாம் நெய், Kai Ellam Ney - கை முழுதும் நெய் மயமாயிரா நின்றது, வயிறு, Vayiru - (இவனது) வயிறானது பிள்ளை பரம் அன்று, Pillai Param Andru - பிள்ளைப் பருவத்துக்கு ஏற்றதா யிருந்ததில்லை. இ ஏழ் உலகும் கொள்ளும், I Ezhulagam Kollum - இந்த ஸப்த லோகங்களையும் உட்கொள்ளக் கடவது போலும், பேதையன், Paethaiyan - அறிவற்றவளான நான் என் செய்கேன், En Seigken - என்ன பண்ணுவேன்? |