திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1911 | பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்ணி வைப்பாரைப் போலே கடைகிற போதே துடங்கி இவர்கள் எங்கே வைப்பார்களோ -என்று – கண்ணி வைப்பார் -வலை வைப்பார் இவர்கள் -ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணர்கள்-அடி ஒற்றிக் கொண்டு திரியா நிற்கும் ஆயிற்று – இக்களவைச் செய்து தான் அல்லாதாரைப் போலே தவழா நிற்கும் – நிரபேஷனான இவன்- இவனாக இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை – இவர்கள் கீழே எங்கனே நான் இவ்வூரில் குடி இருக்கும் படி) 4 | மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன் மா மேனி
தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –10-7-4 | பதவுரை Show / Hideமை நம்பு, Mai Nambu - மையணிந்த (- (தான் ஒரு பாவமுமறியாதவன் போல) (என் செய்கேன் என் செய்கேன்)) வேல் கண், Vel Kan - வேற்படை போன்ற கண்களையுடையளான நல்லான், Nallaan - யசோதைப்பிராட்டி யானவள் பெற்ற, Petra - பெற்ற வளை வண்ணம், Valai Vannam - சங்குபோல் வெண்ணிறத்ததாய் நல் மா, Nal Maa - மிகச்சிறந்த மேனி, Meeni - திருமேனியையுடைய தன் நம்பி நம்பியும், Than Nambi Nambiyum - பலராமனும் முன்னம், Munnam - முன்பு இங்கு, Ingu - இத்திருவாய்ப்பாடியில் வளர்ந்தது, Valarnthathu - வளர்ந்ததுண்டு அவன், Avan - அந்த பலராமன் இவை செய்து அறியான், Ivai Seidhu Ariyaan - இப்படிப்பட்ட தீம்புகளைச் செய்த்தில்லை, பொய் நம்பி, Poi Nambi - பொய்யே வடிவெடுத்தவனாய் புள்ளுவன், Pulluvan - வஞ்சகனாய் கள்வம் பொதி அறை, Kalvam Pothi Arai - கள்ளத் தனத்திற்க்க கொள்கலமாயிருப்பவனான இக்கண்ணபிரான் தவழ்ந்திட்டு, Thavazhnthittu - தவழ்நடைகற்று போகின்ற ஆ, Pogindra Aa - போகிறபடி என்னே! இ நம்பி நம்பி ஆ, I Nambi Nambi Aa - இந்த ஸ்வாமி ஸ்வாமியாக ஆயச்சியர்க்கு, Aayachiyarkku - இடைச்சிகளுக்கு உய்வு இல்லை, Uyvu Illai - ஜீவிக்கவழியில்லை |