திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1912 | பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெண் பிறந்தார் தனியே விளையாடும் இடம் பார்த்துக் கொடு திரியும் – அவர்களோடு சென்று கிட்டி பந்தைப் பறித்தும் பரியட்டங்களைக் கிழித்தும் –பின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் – பிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு) 5 | தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்
நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-5 | பதவுரை Show / Hideநங்காய், Nangai - யசோதைப்பிராட்டியே! (- (என் செய்கேன் என் செய்கேன்)) தந்தை, Thandai - (இப்பெண்பிள்ளையின்) தகப்பனார் புகுந்திலன், Pugundhilan - வீடுவந்து சேரவில்லை, நான் இங்கு இருந்திலன், Naan Ingu Irundhilan - நானும் வீட்டிலிருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை, Thozhimaar Aarum Illai - தோழியரும் ஒருவருமில்லை சந்தம் மலர் குழலாள், Santham Malar Kuzhalaal - பரிமளம்மிக்க பூக்களை யணிந்த கூந்தலை யுடையளான என்மகள் தனியே, Thaniye - ஒருத்தியாயிருந்துகொண்டு விளையாடும் இடம், Vilaiyaadum Idam - விளையாடிக்கொண்டிருந்த விடத்திலே குறுகி, Kurugi - சென்று கிட்டி பந்து பறித்து, Pandhu Pariththu - (அவளது கையில் நின்றும்) பந்தைப்பிடுங்கியும் துகில் பற்றி கீறி, Thugil Patri Keeri - துணியைப் பிடித்துக் கிழித்தும் படிறு செய்யும், Padiru Seyyum - தீம்புகளைச் செய்கிற படிறன், Padiran - தூர்த்தனாகிய நந்தன் மதலைக்கு, Nandhan Mathalaikku - கண்ணன் விஷயத்திலே இங் என் கடவோம், Ing En Kadavom - இவ்விடத்தில் என்ன செய்யக் கடவோம்? |