திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1914 | பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அத்தை அடங்கலும் கோவர்த்தநோச்மி-என்று தான் அமுது செய்த ஆச்சர்ய பூதன் – அத்தை அடங்கலும் அமுது செய்தானாய்-அல்லாதாரைப் போலே இருந்தான் ஆயிற்று) 7 | ஆயிரம் கண்ணுடை இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப
பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய்
மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10-7-7 | பதவுரை Show / Hideநங்காய், Nangai - அசோதாய்! ஆயர், Aayar - இடையர்கள் ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கென்று, Aayiram Kan Udai Indiranarukkenru - ஸஹஸ்ராக்ஷனான தேவேந்திரனுக்காக விழவு எடுப்ப, Vizhavu Eduppa - ஆராதனை செய்வதற்கு நல்லன பாசனம், Nallana Paasanam - நல்ல பாத்திரங்களிலே பண்டிகளால், Pandigalal - (பலபல) வண்டிகளாலே புகப்பெய்த அதனை எல்லாம், Pugappeyda Adhanai Ellam - கொண்டுவந்து தள்ளப்பட்ட அந்த அன்னராசியை யடங்கலும் இன்று, Indru - இன்றையதினம் அங்கு, Angu - அவ்விடத்தில் மாயன் உன் மகன், Maayan Un Magan - மாயச்செய்கை வல்லவனான உன்பிள்ளை போய் இருந்து, Poi Irundhu - போயிருந்து ஒரு பூதம் வடிவு கொண்டு, Oru Poodham Vadivu Kondu - ஒரு பூதத்தின் வடிவைப் பூண்டு அதனை எல்லாம் முற்ற, Adhanai Ellam Muttra - அவை முழுவதையும் வளைத்து வாரி, Valaithu Vaari - (கைகளால்) வாரித்திரட்டி உண்டிருந் தாண்டோலும், Undirun Thandolum - உட்கொண்டானானாயிற்று |