திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1915 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1915பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் பூதனை உடைய முலையை அமுது செய்த பின்பு என்னுடைய பிள்ளை என்று இருக்க அஞ்சுவன்) 8
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய் சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே –10-7-8
பதவுரை Show / Hide
தோய்ந்த நங்காய், Thoyntha Nangkaai - தோய்ந்து வைக்கப்படட
தயிரும், Thayirum - தயிரையும்
நறு நெய்யும், Naru Neyyum - மணம் மிக்க நெய்யையும்
பாலும், Paalum - பாலையும்
ஓரோ குடம், Oro Kudam - ஒவ்வொரு குடத்தில் நின்றும்
துற்றிடும் என்று, Thuttridum Enru - (கண்ணன்) அமுது செய்து விடுவனென்று
ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகளெல்லாரும்
கூடி, Koodi - திரண்டு
அழைக்கவும், Azaikkavum - என்னைக் கூப்பிடச் செய்தேயும்
நான், Naan - (அவனைப் பெற்ற தாயாகிய) நான்
இதற்கு, Idharku - இந்தச் செயலுக்கு
என்கி, Enki - ஈடுபட்டு
இவனை, Ivanai - இப்பிள்ளையை நோக்கி
பிரான், Piraan - “பிரானே!
சோத்தம், Soththam - உனக்கு ஓர் அஞ்சலி,
இவை செய்ய பெறாய், Ivai Seiyya Perai - இப்படிப்பட்ட தப்புக்காரியங்களைச் செய்யாதொழியவேணும்?“
என்று இரப்பன், Endru Irappan - என வேண்டிக்கொள்வனே யன்றி
உரப்ப கில்லேன், Urapa Killeen - கோபித்துப் பேசமாட்டுகின்றிலேன்
பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய
முலை, Mulai - முலையை
உண்ட பின்னை, Unda Pinnai - (இவன்) உறிஞ்சியுண்டது முதலாக
இ பிள்ளையை, I Pillaiyai - இந்த மகனை
பேசுவது அஞ்சுவன், Pesuvathu Anjuvan - பொடிந்துவார்த்தை சொல்ல அஞசா நின்றேன்.