திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1917 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1917பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எனக்குக் கைம்முதல் ஒன்றும் இல்லை –என் கையில் பலமில்லை -என்னவுமாம் – என் நெஞ்சு புண் மாறாத படி யாகப் பண்ணினாய் – நான் இக் கார்ஹச்த்த்ய தர்மத்தை எங்கனே அனுஷ்டிக்கும் படி) 10
அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை நெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ –10-7-10
பதவுரை Show / Hide
நங்கைகாள், Nangai Kaal - பெண்காள்! (- (என் செய்கேன் என் செய்கேன்))
சொல்லி அழைத்திட அஞ்சுவன், Solli Azhaitta Anjuvan - (இவன் செய்யுந்தீம்புகளைச்) சொல்லி முறைப்பட அஞ்சுகின்றேன்,
பஞ்சியம் மெல் அடி பிள்ளைகள், Panchiyam Mel Adi Pillaihal - பஞசுபோல் மெல்லிய அடியை யுடையரான (இவ்வூர்ப்) பிள்ளைகள்
ஆயிரம் நாழி நெய்யை, Aayiram Naazhi Neyyai - ஆயிரம் நாழி நிறைந்த நெய்யை
உண்கின்று, Ungindru - உண்ணும்போது
பாகம் தான் வையார்களே, Paagam Thaan Vaiyaarkale - ஸ்வல்பபாகமும் மிகுத்தி வைத்தார்களில்லை,
கஞ்சன், Kanjan - கம்ஸனானவன்
கறவு, Karavu - (அவனுக்குச் செலுத்தவேண்டிய) கப்பமோவென்றால்
எட்டு நாளில், Ettu Naalil - இன்னமும் எட்டுநாளைக்குள் செலுத்தவேண்டிய தாகவுள்ளது.
என் கைவலத்து, En Kaivalathu - என்கையில்
ஆதும் இல்லை, Aadum Illai - ஒன்றுமில்லை
நம்பி, Nambi - கண்ணபிரானே!
நெஞ்சத்து இருப்பன செய்து வைத்தாய், Nenjathu Iruppan Seidhu Vaiththai - என்னெஞ்சு புண்பட்டிருக்கும்படியான காரியங்களையே செய்து போகிறாய்