திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1918 | பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாமரைப் பொய்கையிலே சென்று ஒளிந்து இருந்து – அவர்கள் உடைய பரியட்டங்களை அடைய வாரிக் கொண்டு – வேணுமாகில் இங்கனே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள்- என்று இருந்தாய்) 11 | அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை
பங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு அரவு ஏர் இடையர் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் –10-7-11 | பதவுரை Show / Hideநம்பி, Nambi - கண்ணபிரானே! (- (அவ்வளவிலே)) ஆயர் மடம் மக்களை, Aayar Madham Makkalai - இடையர்களுக்கு விதேயரான பெண்பிள்ளைகளிடத்தில் அங்ஙனும், Angganum - அப்படியும் தீமைகள் செய்வர்களோ, Theemaigal Seivargaloo - தீம்புகள் செய்யத் தகுமோ? பங்கயம் நீர், Pangayam Neer - தாமரைப்பொய்கையிலே குடைந்து, Kudaindhu - அவகாஹித்து ஆடுகின்றார்கள் பின்னே சென்று, Aadugindraargal Pinne Sendru - நீராடப்போனவர்களின் பின்னேபோய் ஒளித்து இருந்து, Ollithu Irundhu - மறைந்து கொண்டிருந்து அங்கு, Angu - அவ்விடத்தில் அவர், Avar - அந்தப் பெண்பிள்ளைகளினுடைய பூ துகில், Poo Thugil - அழகிய சேலைகளை வாரிக் கொண்டிட்டு, Vaarik Kondaithu - வாரிக்கொண்டு அரவு ஏர் இடையார், Aravu Aeer Idaiyaar - அரவுபோலே நுண்ணிய இடையையுடையரான அப்பெண்கள் இரப்ப, Irappa - (அத்துகில்களை) யாசிக்க நல் மங்கைமீர், Nal Mangaimir - அழகிய பெண்காள்! வந்து, Vandhu - (நானிருக்குமிடத்திலே) வந்து கொள்மின், Kolmin - (உங்கள் துகில்களைப்) பெற்றுக் கொள்ளுங் கோள்’ என்று, Endru - என்று சொல்லி மரம் ஏறி இருந்தாய் போலும், Maram Eri Irundhai Polum - மரத்தினுச்சியில் ஏறியிருந்தாயாமே |