திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1919 | பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருவடிகளால் உண்டான ஸ்பர்சத்தாலே தழைத்துப் பூத்த கடம்பிலே ஏறிப் பெரிய வேகத்தாலே மடுவிலே ஏறப் பாய்ஞ்சு –ஆயிரம் வாயாலும் விஷத்தை உமிழா நிற்பானாய் தான் நச்சுப் பொய்கையிலே கிடக்கிற காளியனோடே பிணங்கி வந்தாய் போலே இருந்தது) 12 | அச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-12 | பதவுரை Show / Hideஇப்பிள்ளைக்கு, Ippillaiyku - இந்த பிள்ளைக்கு தினைத் தனை, Dinai Thanai - கொஞ்சமேனும் அச்சம் இல்லை, Acham Illai - பயமில்லை ஆண்மையும் சேவகமும், Aanmiyum Sevagathum - சௌர்யமும் வீர்யமுமே யுள்ளது உச்சியில் முத்தி, Uchchiyil Muththi - உச்சிமோந்து வளர்ந்து எடுத்தேனுக்கு, Valarnthu Eduthenukku - வளர்த்தெடுத்தாயாகிய எனக்கும் தான் உரைத்திலன், Thaan Uraiththilan - தான் சொல்லாதவனாய் இன்று போய், Indru Poi - இன்று வெளியிற்போய் பச்சிலை, Pachilai - பசுமையான இலைகளை யுடைத்தாய் பூ, Poo - பூத்திருக்கிற கடம்பு, Kadambu - கடப்பமரத்தின்மீது ஏறி, Eri - ஏறி விசை கொண்டு, Visai Kondu - வேகத்துடனே பொய்கையில் பாய்ந்து புக்கு, Poykaiyil Paayndhu Pukku - (காளியநாகங்கிடந்த) பொய்கையிலே குதி்த்து, ஆயிரம் வாய், Aayiram Vaai - ஆயிரம்வாயாலும் நஞ்ச அழல், Nanja Azhal - விஷத்தைக் கக்குகின்ற நாகத்தினோடு, Naagaththinoadu - (அந்தக்காளிய) நாகத்தினோடு பிணங்கி, Pinangi - போர் செய்து நீ வந்தாய் போலும், Nee Vandhai Polum - நீ வந்தாயாமே |