திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1920 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1920பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபரிதன லோகங்கள் அதிரும்படியான த்வனியை உடைத்தாய் அகவாயில் மரம் எல்லாம் தெரியும்படி நெருப்புப் போலே சிவந்த கண்ணை உடைத்தாய் இருக்கிற – வ்ருஷபங்களோடு கூட நித்ய வசந்தமான சோலைக்குள்ளே பிணங்கி வந்தாய் போலே இருந்தது -என்கிறாள்) 13
தம்பர மல்லன வாண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன் அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை வம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-13
பதவுரை Show / Hide
எம் பெருமான், Em Peruman - என்னுடைய கண்ணபிரானே!
தம் பரம் அல்லன ஆண்மைகளை, Tham Parama Allana Aanmaigalai - தம் பருவத்திளைவல்லாத பௌருஷங்களை
தனியே நின்று செய்வரோ தாம், Thaniye Nindru Seivaro Tham - தனிமையா யிருந்து செய்யத் தகுமோ?
உன்னை பெற்ற வயிறு உடையேன், Unnai Pettra Vayiru Udaiyen - (தனியே அதிமாநுஷ காரியங்களைச் செய்கிற) உன்னைப் பெறும்படியான வயிறு படைத்தவளானேன்,
யான் இனி என் செய்கேன், Yaan Ini En Seigken - உன்னைப் பெற்ற பின்பு நான் என்ன செய்யவல்லேன்?
வம்பு அவிழ்கானத்து அங்கு, Vambu Avizhkanathu Angu - பரிமளம் வீசுகின்ற அச்சோலையிடத்திலே
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல், Ambaram Ezhamum Athirum Idi Kural - மேலுலகங்களெல்லாம் அதிரும்படியான கனத்த குரலையும்
அனல் செம் கண் உடை, Anal Sem Kan Udai - நெருப்புப்போலே சிவந்த கண்களையு முடையனவான
மால் விடையோடு, Maal Vidaiyodu - கரிய எருதுகளோடே
நீ பிணங்கி வந்தாய் போலும், Nee Pinangi Vandhai Polum - நீ போர் செய்து வந்தாயாமே