திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1921 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1921பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்திரு மொழியை வல்லவர்களுக்கு ஸ்ரீ யசோதைப் பிராட்டியார் உடைய அனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -என்கிறார்) 14
அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல் மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ் கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –10-7-14
பதவுரை Show / Hide
அன்னம் நடை, Annam Nadai - அன்னத்தின் நடைபோன்ற நடையையும்
மடம், Madham - மடமைக் குணத்தையுமுடையளான
ஆய்ச்சி, Aaychi - யசோதைப்பிராட்டியானவள்
வயிறு அடித்து அஞ்ச, Vayiru Adithu Anja - வயிற்றிலே மோதிக்கொண்டு பயப்படும்படியாக
அரு வரை போல்மன்னு, Aru Varai Polmannu - பெரிய மலைபோலப் பேராதே நின்ற
கரு களிறு, Karhu Kaliru - (குவலயாபீட மென்கிற) கரிய யானையினுடைய
ஆர் உயிர், Aar Uyir - அருமையான உயிரை
வவ்விய, Vavviya - கவர்ந்த
மைந்தனை, Mainthanai - மிடுக்கனான கண்ணபிரான் விஷயமாக,
மா கடல் சூழ், Maa Kadal Soozh - பெரிய கடலாலே சூழப்பட்டு
கன்னி நல் மா மதிள், Kanni Nal Maa Mathil - ஸ்திரமாய் விலக்ஷணமான பெரிய திருமதிள்களை யுடைத்தான
மங்கையர், Mangaiyar - திருமங்கைநாட்டில் உள்ளவர்கட்கு
காவலன், Kavalan - பரிபாலகாய்
காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க திருக்குணங்களை யுடையரான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் (அருளிச்செய்த)
இன் இசை மாலைகள் ஈர் ஏழும், In Isai Maalaigal Eer Aezhum - மதுரமான இசையை யுடைய சொல்மாலை யான இப்பதினான்கு பாசுரங்களையும்
வல்லவர்க்கு, Vallavarkku - ஓதவல்லவர்களுக்கு
இடர் ஏதும் இல்லை, Idar Aedhum Illai - துன்பமொன்றுமில்லை யாகும்.