திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1924 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நஞ்சுண்டாரைப் போலே மோஹிக்கும் படியாக பண்ணை நுனுங்கிக் கொண்டு வந்து – ராத்ரியிலே பிரசித்தராய் இருப்பார் அப்ரசித்தரைப் போலே வரக் கடவதோ பண்ணை ந னுக்கிக் கொடு வரக் கடவோதோ ராத்ரியிலே வரக் கடவதோ) 3 | கருளக் கொடி ஒன்றுடையீர் தனிப் பாகீர்
உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர்
மருளைக் கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர்
இருளத்து இது என் இது என் இது வென்னோ –10-8-3 | பதவுரை Show / Hideகருளன், Karulan - கருடனாகிற (- (இது என் இது என் இது என்?)) கொடி ஒன்று உடையீர், Kodi Ondru Udaireer - ஒரு த்வஜத்தையுடையவரே! தனி பாகீர், Thani Baageer - அக்கருடனை நடத்துவதில் ஒப்பற்றவரே! உறக்கில், Urakkil - தூங்கும்போது சகடம் அது, Sakadam Adhu - அஸுரனாவாவேசிக்கப் பட்ட) வண்டியானது உருள, Urula - உருமாய்ந்துபோம்படி நிமிர்த்தீர், Nimirtheer - திருவடியைத்தூக்கினவரே! இருளத்து, Irulathu - இவ்விராப்போதிலே மருள, Marula - (பெண்கள்) மோஹிக்கும்படியாக பாடிக்கொடு வந்து, Paadikkodu Vandu - இசைபாடிக் கொண்டு வந்து இல்லம் புகுந்தீர், Illam Pugundheer - வீட்டினுள் வந்து சேர்ந்தீர், |