திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1925 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அரண் அழித்து வருவார் ஆதரம் உடையார் அன்றோ – பூர்ணராய் இருப்பார் அபூர்ணரைப் போலே வரக் கடவதேயோ – கலக்க வருவார் அப்ரசித்தமாக வன்றோ வருவது -அரண் அழித்து வர வேணுமோ) 4 | நாமம் பலவுமுடை நாரண நம்பீ
தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமன் எனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து இது என் இது என் இது என்னோ –10-8-4 | பதவுரை Show / Hideநாமம் பலவும் உடை, Naamam Palavum Udai - பல பல திருநாமங்களையுடைய (- (இது என் இது என் இது என்?)) நாரண நம்பி, Naarana Nambi - ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே! மிக நாறு, Miga Naaru - மிகவுமு பரிமளித்துக்கொண்டிருக்கிற துளபம் தாமம், Thulabam Thaamam - திருத்துழாய்மாலையை இடுகின்றீர், Idhuginreer - அணிந்துகொண்டிருப்பவரே! காமன் என, Kaaman Ena - மன்மதன்போல பாடி வந்து, Paadi Vandu - பாடிக்கொண்டுவந்து ஏமத்து, Emathu - இராப்பொழுதில் இல்லம்புகுந்தீர், Illampugundheer - வீட்டினுள் புகுந்தீர், |