திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1926 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1926பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மயிர் முடி பேணாதே வர வேணுமோ –ஆயுதத்தோடு வர வேணுமோ – பின்னை வெற்றி கொண்டாடி நிற்க வேணுமோ) 5
சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்து மற்றும் பல மா மணி பொன் கொடணிந்து முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் எற்றுக்கு இது என் இது என் இது என்னோ –10-8-5
பதவுரை Show / Hide
குழல், Kuzhal - திருக்குழல்களானவை (- (இதுஎன் இதுஎன் இதுஎன்?))
சுற்றும், Sutrum - பிடரியைச்சுற்றிலும்
தாழ, Thaa - தாழ்ந்தலையப்பெற்றும்
சுரிகை, Surigai - உடைவாளை
அணைத்து, Anaiththu - தரித்துக்கொண்டும்
மற்றும் பல, Mattrum Pala - மற்றும் பலவகைப்பட்ட
மா மணி, Maa Mani - சிறந்த ரத்னாபரணங்களையும்
பொன், Pon - பொன்னுபரணங்களையும்
அணிந்துகொடு, Anindhukodu - சாத்திக்கொண்டும்
முற்றம் புகுந்து, Muttram Pugundhu - (எங்கள்வீட்டு) முற்றத்திலே வந்து சேர்ந்து
முறுவல் செய்து, Muruvai Seidhu - புன்சிரிப்புச் சிரித்து
ஏற்றுக்கு நின்றீர், Aetrukku Nindheer - எதுக்காக நிற்கிறீர்?