திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1929 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உமக்கு சத்ருசராய் இருப்பவர் பலரும் அல்லையோ-இது தன்னைக் கொண்டாடும் அவர்கள் அன்றோ அவர்கள் – இது என்ன கஷ்டமோ–சாஹாசங்களைச் செய்யக் கடவ நீர் இங்கே வந்தது என் – குறைவற்ற நீர் இங்கே வந்தது என் – மேன்மை உடையார் வரக் கடவதோ) 8 | புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர்
இக்காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர்
எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-8 | பதவுரை Show / Hideபுக்கு, Pukku - (பொய்கையிலே) குதித்து (- (இதுஎன் இதுஎன் இதுஎன்)) ஆடு அரவம் பிடித்து, Aadu Aravam Pidiththu - படமெடுத்தாடுகின்ற காளிய நாகத்தைப் பிடித்து ஆட்டும், Aattum - ஆட்டிவாட்டின புனிதீர், Punitheer - பரிசுத்தரே! இக்காலங்கள், Ikkaalangal - இப்போது யாம், Yaam - நாங்கள் உமக்கு, Umakku - உமக்கு ஏது ஒன்றும் அல்லோம், Aethu Ondrum Allom - ஒருசரக்காகவும் எண்ணப்படுவோமல்லோம், தக்கார், Thakkar - உமக்குத் தகுத்திருப்பவர்களாய் பலர், Palar - அளவற்றவர்களான தேவிமார், Devimar - மஹிஷீவர்க்கங்களை சால, Sala - மிகவும் உடையீர், Udaiyeer - உடையராயிருக்கின்றீர் எக்நே, Eknai - இது என்ன கஷ்டகாலம்! |